அரச சேவை தொடர்பில் நிதி அமைச்சு வெளியிட்ட அறிவித்தலின் 8 முக்கிய விடயங்கள்

அரச சேவை தொடர்பில் நிதி அமைச்சு வெளியிட்ட அறிவித்தலின் 8 முக்கிய விடயங்கள்

அரச செலவீனங்களைக் கட்டுப்படுத்துவதற்காக, நிதி அமைச்சின்  செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால், விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


நெருக்கடியான சூழலில், அரசின் வருவாயை அதிகரிக்க காலம் எடுக்கும் என்பதால், அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படும் வகையில், அரச செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று  அந்த சுற்றறிக்கiயில் கூறப்பட்டுள்ளது.

01. ஊழியர்களை ஆட்சேர்ப்பதற்காக ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரையில் நியமனம் வழங்கப்படாத பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்களை பிற்போடுதல்.

02. அமைச்சரவையினால் அனுமதிக்கப்படாத எந்த ஒரு கொடுப்பனவு, நலன்புரி வேலைத்திட்டங்கள் அபிவிருத்தி உதவிகள் மற்றும் நிவாரணங்கள் வழங்குவதை இடைநிறுத்தல்.

03. ஊழியர்களின் அவசியத்தன்மையின் அடிப்படையில் அமைச்சின் செயலாளர்கள் / திணைக்களப் பிரதிநிதிகளின் அனுமதியின்றி வழங்கப்படுகின்ற சம்பளம் தவிர்ந்த கொடுப்பனவு உள்ளிட்டவற்றை அனைத்து உத்தியோகத்தர்கள் குழுவினருக்கும் வழங்குவதற்கு பதிலாக உண்மையாகவே பணியில் ஈடுபடுகின்றவர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தல்.

04. அரச உத்தியோகத்தர்களுக்கு தவணை அடிப்படையில் பணிக்குழாம் பிரதானிகளாலன வழங்கப்படுகின்ற கடன் வசதிகளை இந்த ஆண்டு இறுதி வரையில் இடை நிறுத்தல்.

05. அரச நிறுவனங்களுக்கு இடையில் தொடர்பாடல் நடவடிக்கைகளுக்காக இயன்றளவு இலத்திரனியல் தொலைத்தொடர்பு முறையைப் பயன்படுத்துவதன் மூலம் எழுத்து ஆவணங்கள் பயன்பாடுகள் மற்றும் அச்சிடல் நடவடிக்கைகளுக்கான செலவுகளை குறைத்தல்.

06. அனைத்து நலன்புரி மற்றும் நிவாரண வேலைத்திட்டங்களை மீளாய்வுக்கு உட்படுத்தி அவை அமைச்சின் மூலம் கிடைக்கும், குறைந்த வருமானம் கொண்டோர் அல்லது அத்தியாவசியமான பயனர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தல்.

07. உண்மையாக பணியில் ஈடுபட்டுகின்றதாக / வருகைப் பதிவை உறுதிப்படுத்தும் வருகைப்பதிவு உறுதிப்படுத்தப்படாமல் வழங்கப்படுகின்ற அனைத்து மேலதிக கொடுப்பனவுகளையும் இடை நிறுத்துதல் மற்றும் பல்வேறு வகையில் பெற்றுக்கொள்ளப்படும் மேலதிக கொடுப்பனவுகளின் மொத்த கொடுப்பனவு, சம்பளத்தை விடவும் அதிகரிக்காமல் இருக்கும் வண்ணம் செயற்படும் முறைமையைத் தயாரித்தல்.

08. அவசியமற்ற செலவுகள் என கவனிக்கப்பட கூடிய அனைத்து செலவுகள், அரச நிறுவனங்களின் மூலம் முன்னெடுக்கப்படும் நிகழ்வுகள், திறப்பு விழாக்கள், சம்மேளனங்கள் உள்ளிட்ட அவசியமற்ற மற்றும் முன்னுரிமை மற்ற செலவுகளை இடைநிறுத்துதல் மற்றும் அவற்றுக்காக அரச நிதியை பயன்படுத்தாதிருத்தல்.

மேலும் செய்திகள்

அரசசேவை ஆட்சேர்ப்புக்களை இடைநிறுத்த நிதி அமைச்சு அறிவித்தல்

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றம்: விண்ணப்ப பிரச்சினைகளுக்கான தீர்வுகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image