இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (26) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.

 
இதன்படி, 2 ஆயிரத்து 675 ரூபாவாக உள்ள 12.5 கிலோகிராம் எடைகொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 2 ஆயிரத்து 185 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
 
இதற்கமைய, 12.5 கிலோகிராம் எடைகொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 4 ஆயிரத்து 860 ரூபாவாகும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
 
ஆயிரத்து 71 ரூபாவாக உள்ள 5 கிலோகிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை, 874 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, ஆயிரத்து 945 ரூபாவாகவும், 
 
506 ரூபாவாக உள்ள 2.3 கிலோகிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை, 404 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 910 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image