தேயிலை உற்பத்தி வீழ்ச்சியால் 73 மில். டொலர் இழப்பு

தேயிலை உற்பத்தி வீழ்ச்சியால் 73 மில். டொலர் இழப்பு

2022 முதல் காலாண்டில் தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதால் 73 மில்லியன் டொலர் வருமானம் இழக்கப்பட்டுள்ளது என தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்களின் சங்கத்தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இரசாயன உரத்துக்கு விதிக்கப்பட்ட தடையின் விளைவாகவே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கவலை வெளியிட்டார்.

இதேவேளை 50 கிலோ கொண்ட பசளை மூடையின் விலை 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இரசாயனப் பசளை யின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளதால் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் இரசாயன பசளை பாவிப்பதை கைவிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் கொழுந்து உற்பத்தி குறைந்துள்ளது. தேயிலைக் கொழுந்தின் தரமும் குறைந்துள்ளதாகவும் தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாளுக்கு நாள் தேயிலை உற்பத்தி குறைந்து உலக சந்தையில் எமக்குள்ள இடத்தை ஏனைய நாடுகள் கைப்பற்றும் சூழ்நிலை உருவாகும் எனவும் லயனல் ஹேரத் அச்சம் வெளியிட்டுள்ளார்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image