கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு கிடைக்கவில்லை

கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு கிடைக்கவில்லை

நாடளாவிய ரீதியில் ஆசிரியர்களுக்கு நேற்று (21) திருத்தப்பட்ட சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்களுக்காக அரசாங்கம் அறிவித்த 5000 ரூபா கொடுப்பனவும் ஆசிர்களின் சம்பளத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், கிழக்கு மாகாண ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஊழியர்களுக்கு இன்று (20) 5000 ரூபா கொடுப்பனவு கிடைக்கவில்லை.

கிழக்கு மாகாணத்திலுள்ள ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஊழியர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு இன்று (20) வழங்கப்பட மாட்டாது என சம்பந்தப்பட்ட வலயக் கல்வி பணிமனைகளுக்கு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்திருந்தது.

இது தொடர்பாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகத்திடம் வினவியபோது, திருத்தப்பட்ட சம்பளத்துடன் 5000 ரூபா கொடுப்பனவையும் இணைத்து வழங்குவதற்கு போதுமானளவு நிதி கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நிதி கிடைத்தவுடன் 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.

மூலம் - நியூஸ்ஃபெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image