அக்கரபத்தனையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு 50 இலட்சம் இழப்பீடு

அக்கரபத்தனையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு 50 இலட்சம் இழப்பீடு

அக்கரப்பத்தனையில் மின்சாரம் தாக்கி பலியான தோட்டத் தொழிலாளியான இராமகிருஸ்ணனின் குடும்பத்துக்கு நிர்வாகம் இழபபீடாக 50 இலட்சம் ரூபாவும் வாழ்வாதாரத்தை முன்னெடுத்து செல்ல காணி ஒன்றும் வழங்க இணங்கியுள்ளது.

 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தமது பேஸ்புக் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட டயகம கிழக்கு 03ம் பிரிவு தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பலியான தோட்டத் தொழிலாளியும், மூன்று பிள்ளைகளின் தந்தையுமாகிய இராமகிருஸ்ணனின் குடும்பத்துக்கு, அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிர்வாகம் நட்டயீடாக 50 இலட்சம் ரூபாவும் வாழ்வாதாரத்தை முன்னெடுத்து செல்ல காணி ஒன்றும் வழங்க இணங்கியுள்ளது.

 

மேலும் மின்சாரம் தாக்கி பலியான இராமகிருஸ்னனின் பிள்ளைகளின் கல்வி செலவை முழுமையாக தோட்ட நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்தோடு உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு சுயத்தொழிலை மேற்கொள்ள காணியும் வழங்குதல் வேண்டும் என பல  நிபந்தனைகளை காங்கிரஸ் சார்பில் முன்வைத்தோம்.

 

இந்த நிலையில் இன்று (11) மீண்டும் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் உயிரிழந்த தொழிலாளி இராமகிருஸ்ணனின் குடும்பத்திற்கு 50 இலட்சம் ரூபாய் நிவாரண நட்டயீடு வழங்க தோட்ட கம்பனி இணக்கம் தெரிவித்ததுடன் வாழ்வாதாரத்தை முன்னெடுத்து செல்ல காணியும் வழங்குவதாக இணங்கியுள்ளது.

 

அக்கரபத்தன பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட டயகம கிழக்கு 3ம் பிரிவு தோட்டத்தில் பணிபுரிந்த ராமகிருஷ்ணனின் துரதிஷ்டவசமான மறைவுக்குப் பின்னர் அவரது மூன்று பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைக்காக அக்கரபத்தன பெருந்தோட்ட யாக்கத்துடன்  நான் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவரின் மூன்று பிள்ளைகளுக்கான  கல்வி நடவடிக்கைக்காக தலா 10 லட்சம் ரூபாய் அடிப்படையில் 30 லட்சம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு வைப்பில் இடப்பட்டுள்ளது.

 

மேலும் அக்குடும்பத்தினரின் வாழ்க்கையை நடாத்திச் செல்ல மேலதிகமாக 20 இலட்சம் ரூபாயும்,  அவர்களுக்கு வீடொன்றை அமைத்துக் கொள்வதற்கு  தேவையான காணியை வழங்குவதற்கும் அக்கரபத்தனை பெருந்தோட்ட யாக்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. - எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image