கொழும்பில் 30 வீதமான டெல்டா திரிபு தொற்றாளர்கள்!

 கொழும்பில் 30 வீதமான டெல்டா திரிபு தொற்றாளர்கள்!

 கொழும்பு நகருக்குள் அடையாளங்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் 30 வீதமானவர்கள் டெல்டா திரிபுத் தொற்றுக்குள்ளானவர்கள் என்று கொழும்பு மாநகரசவை சிரேஷ்ட வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் தினமும் 550 தொடக்கம 600 பேரை வரையான தொற்றாளர்கள் அடையாளங்காணப்படுகின்றனர். அதில் டெல்டா திரிபுடையவர்கள் 30 வீதம் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்திக்கொள்வதனூடாக மாத்திரமே நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். நகருக்குள் 75 வீதம் வரை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளனர். எதிர்வரும் நாட்களில் வீடு வீடாக சென்று தடுப்பூசி வழங்க தீர்மானித்துள்ளோம். பொலிஸார் உதவியுடன் விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம்..

கொழும்பு மாநகர சபையின் பிரதான தடுப்பூசி மையம் சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் அமைந்துள்ளது.

அடக்கம் செய்யப்படாத அதிக எண்ணிக்கையான கொவிட் தொற்றுக்குள்ளாகி இறந்தவர்களின் சடலங்கள் உள்ளன என்பதை மறுத்துள்ள டொக்டர் விஜயமுனி கொழும்பு மாநரகசபையின் கீழ் அடக்கம் செயற்பாடுகள் ஒழுங்கு முறையில் நடைபெறுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image