கொவிட் தொற்றுக்குள்ளாகும் குடும்ப நல சுகாதர மாதுக்கள்

கொவிட் தொற்றுக்குள்ளாகும் குடும்ப நல சுகாதர மாதுக்கள்

இலங்கையில் இதுவரை சுமார் 600 குடும்ப நல சுகாதார மாதுக்கள் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்றும் நாளொன்றுக்கு 10 -15 பேர் வரை தொற்றுக்குள்ளாகின்றனர் என்றும் அரச குடும்ப நல சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவி தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

இது மிகவும் அபாயகரமான மற்றும் கவலைக்குரிய விடயம். இந்நிலைக்கு சுகாதார அதிகாரிகள் நேரடியாக பொறுப்பேற்கவேண்டும் என்றும் நேற்று (08) கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குடும்ப நல சுகாதார மாதுக்கள் மிக மோசமாக கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி வருகின்றனர். அவர்களுக்கான முகக்கவசங்கள், தொற்று நீக்கி திரவங்கள், கையுரைகள் மற்றும் பாதுகாப்பு உடைகள், போக்குவரத்து வசதிகள் என்பன அவரவர் சொந்த செலவிலேயே செய்துக்கொண்டே பொது மக்களுக்கான சேவைகளை வழங்கி வருகின்றனர். கொவிட் தொற்றுக்குள்ளாகும் குடும்ப நல சுகாதார மாதுக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலை தொடர்பில் நாம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு தொடர்ந்து தெரியப்படுத்தி வருகிறோம். எனினும் எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. தொற்றுக்குள்ளாகியுள்ள குடும்ப நல சுகாதார மாதுக்களுக்கு சரியான முறையில் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்குக்கூட இடமில்லை. அவர்கள் மிகவும் கவலைக்குரிய நிலையில் வைத்தியசாலைகளில் உள்ளனர். சிலருக்கு கட்டில் கூட இல்லை. மெத்தை அல்லது பாய் விரித்து கீழே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image