நாளை மின்துண்டிப்பு அமுலாகும் விதம்: 3 மணித்தியாலங்கள் அதிகரிப்பு

நாளை மின்துண்டிப்பு அமுலாகும் விதம்: 3 மணித்தியாலங்கள் அதிகரிப்பு

நாளைய தினம் 13 மணித்தியாலங்களுக்கு மின்துண்டிப்பை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, A,B,C,D,E,F ஆகிய வலயங்களில் நாளை (31) அதிகாலை 3 முதல் 6 மணிவரை 3 மணித்தியாலங்களும், நண்பகல் 12 மணிமுதல் மாலை 4 மணிவரை 4 மணித்தியாலங்களும், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை 6 மணித்தியாலங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

G,H,I,J,K,L ஆகிய வலயங்களில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணிவரை 3 மணித்தியாலங்களும், காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை 4 மணித்தியாலங்களும், மாலை 4 மணிமுதல் இரவு 10 மணிவரை 6 மணித்தியாலங்களும், மின் துண்டிப்பு அமுலாகவுள்ளது.

P,Q,R,S ஆகிய வலயங்களில் அதிகாலை 3 மணிமுதல் காலை 6 மணிவரை 3 மணித்தியாலங்களும், நண்பகல் 12 முதல் மாலை 4 மணிவரை 4 மணித்தியாலங்களும், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 வரை 6 மணித்தியாலங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

T,U,V,Wஆகிய வலயங்களுக்கு  நள்ளிரவு 12 மணிமுதல் அதிகாலை 3 மணிவரை 3 மணித்தியாலங்களும், காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை 4 மணித்தியாலங்களும், மாலை 4 மணிமுதல் இரவு 10 மணிவரை 6 மணித்தியாலங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களுக்கு  அதிகாலை 5.30 முதல் காலை 9 மணிவரை 3 மணிநேரமும் 30 நிமிடங்களும், மாலை 4 மணிமுதல் மாலை 6 மணிவரை 2 மணித்தியாலங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு

என்ன செய்ய வேண்டும்? தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்துரையாடல்!

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image