அரச செலவுகளை 250பில்லியன் ரூபாவினால் குறைக்க தீர்மானம்

அரச செலவுகளை 250பில்லியன் ரூபாவினால் குறைக்க தீர்மானம்

அரச செலவுகள் 250பில்லியன் ரூபாவினால் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த ஆண்டுக்கான செலவுகளை 250பில்லியன்களினால் குறைப்பது குறித்த வழிமுறைகளை திறைசேரி பரிந்துரை செய்துள்ளது.ஏற்கனவே இந்த ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கு பதிலீடாக இடைக்கால வரவு செலவுத் திட்டமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.அதில் குறிப்பாக அரசாங்கத்தின் மூலதன செலவுகள் வெகுவாக குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் செலவு குறைப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பரிந்துரை செய்துள்ளார்.வரி வருமானங்களை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினகரன்

தோட்டங்களில் பட்டினி சாவைத் தடுக்க தரிசு காணிகளை உடன் பிரித்து வழங்குக - பிரதமரிடம் மனோ கோரிக்கை

அரச சேவையாளர்கள் 10 வருடங்களுக்கு வரப்பிரசாதங்களை விட்டுக்கொடுக்க வேண்டும்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image