அரச ஊழியர்களின் போக்குவரத்து செலவு அதிகரிப்பு - அரச நிர்வாக அமைச்சின் செயலாளர்

அரச ஊழியர்களின் போக்குவரத்து செலவு அதிகரிப்பு - அரச நிர்வாக அமைச்சின் செயலாளர்

கனிஷ்ட அரச உத்தியோகத்தர்கள் முதல் அதற்கு கீழே பணிபுரிகின்ற அரச உத்தியோகத்தர்கள் வரை அனைவரும் தங்கள் கடமைக்கு சமூகமளிப்பதற்கான போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர், மேலும் தெரிவிக்கையில்.

கடந்த ஜனவரி மாதம் 10,000 ரூபாவுக்கு அலுவலக போக்குவரத்து சேவையில் கடமைக்கு வந்தவர்கள் மார்ச் மாதம் 15,000 ரூபாவாக செலவு அதிகரித்திருக்கிறது. இப்போது அது 20,000 ரூபாவாக அதிகரித்திருக்கிறது. சிற்றூழியர்கள் 40 ரூபாவுக்கு போக்குவரத்தில் ஈடுபட்டவர்கள் இப்போது 120 ரூபாவாக ரூபாய் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. அவர்களுடைய போக்குவரத்து செலவை சேர்த்து மதியநேர சாப்பாட்டு செலவையும் கூட்டினால் மாதக்கடைசியில் மாத்திரமல்ல வருட கடைசியில் கூட சேலையையும் பாதணியையும் எடுக்க முடியாத நிலை ஏற்படும். ஒரு அசௌகரிய நிலையில் நீங்கள் இருக்கின்றீர்கள் என்பதை நான் அறிவேன்.

அரச செலவுகளை 250பில்லியன் ரூபாவினால் குறைக்க தீர்மானம்

தோட்டங்களில் பட்டினி சாவைத் தடுக்க தரிசு காணிகளை உடன் பிரித்து வழங்குக - பிரதமரிடம் மனோ கோரிக்கை

அரச சேவையாளர்கள் 10 வருடங்களுக்கு வரப்பிரசாதங்களை விட்டுக்கொடுக்க வேண்டும்

அது அவ்வாறிருப்பினும், நேற்றைய தினம் நான் ஒரு கூட்டத்தில் இருந்த போது நான்கு, ஐந்து அமைச்சர்களின் செய்தி ஒன்று வந்தது. அரசு ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கருத்துடன். நான் கூறினேன் தற்போதைய சந்தர்ப்பத்தில் சம்பளம் கிடைக்கப்பெறாதவர்களுக்கு கூறி அசௌகரிய நிலையை ஏற்படுத்துவது உசிதமில்லை. நான் முன்னர் கூறிய தரப்பினருக்கு போக்குவரத்து அசௌகரியத்தை நிவர்த்தி செய்வதற்காக கொடுப்பனவு ஒன்றை வழங்குவது தான் இப்போதைய சந்தர்ப்பத்தில் உசிதமானது - என்று தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image