பெருந்தோட்ட நிறுவனங்களின் மறுசீரமைப்புக்கான அமைச்சரவைப் பத்திரம்
பெருந்தோட்ட நிறுவனங்களின் மறுசீரமைப்புக்கான முழு வேலைத்திட்டம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.
வட்டவளை பகுதியிலுள்ள பெருந்தோட்டமொன்றுக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த அமைச்சரவைப் பத்திரத்தில் மிகவும் வெளிப்படையான முறையில் ஏற்றுமதி விவசாய நடவடிக்கைகளுக்காக காணிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான யோசனைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த விரும்பும் முதலீட்டாளர்களுக்கு அரசாங்கத்தின் கீழ் உள்ள பெருந்தோட்டங்களை நீண்டகால குத்தகைக்கு வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
மூலம் - சூரியன் செய்திகள்