பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் அமைச்சரவை முக்கிய தீர்மானம்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் அமைச்சரவை முக்கிய தீர்மானம்
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் அமைச்சரவையில் முக்கிய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
 
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிட்டு பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சுமப்பிப்பதற்காக 05.09.2022 அன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், அதற்கமைய குறித்து சட்டமூலம் 22.03.2023 அன்று அரச வர்த்தமானில் வெளியிடப்பட்டுள்ளது.
 
பின்னர் ஆர்வலர்கள் பலர் (உள்ளூர் மற்றும் சர்வதேச) குறித்த சட்டமூலத்தில் ஒரு சில பிரிவுகள் பற்றி கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
 
அதற்கமைய நீதி சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு மின்னியல் மற்றும் இலத்திரனியில் ஊடகங்கள் மூலமாக ஆர்வம் காட்டும் தரப்பினர்களை முறைசார்ந்த வகையில் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன்  ஒரு சில தரப்பினருன் நீதி சிறைச்சாலை அலுவலகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்  கலந்துரையாடல்களை நடத்தி இருந்தார்.
 
அதற்கமைய முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளையும் கருத்திற்கொண்டு அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள ஆரம்ப சட்டமூலத்தை மீண்டும் திருத்தியமைத்து புதிய சட்டமூலத்தை சட்டவரைஞர் மூலம் தயாரிப்பதற்கான படிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
குறித்த புதிய சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பட்டுள்ளது.
 
அதற்கமைய குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும், நீதி சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image