புதிய தாெழில் சட்டத்துக்கு திருத்தங்களை முன்வைக்க தொழிற்சங்கங்களுக்கு மேலும் கால அவகாசம்

புதிய தாெழில் சட்டத்துக்கு திருத்தங்களை முன்வைக்க தொழிற்சங்கங்களுக்கு மேலும் கால அவகாசம்

புதிய தாெழில் சட்டத்துக்கு புதிய திருத்தங்களை சமர்ப்பிப்பதற்கு தொழிற்சங்கங்களுக்கு  அடுத்த மாதம் முதல் வாரம் வரை காலம் வழங்க வேண்டும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தேசிய தொழில் ஆலாேசனை சபைக்கு தெரிவித்தார்.

தேசிய தொழில் ஆலாேசனை சபை கூட்டம் நேற்று முன்தினம் (29) கூடிய போதே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

May be an image of 2 people and dais

தற்போது இருக்கும் காலம் கடந்த  தொழில் சட்டங்களுக்கு திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. 

சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் பிரேரணைகளுக்கு திருத்தங்களை முன்வைக்காமல், தொழில் சட்டத்துக்கு புதிய திருத்தங்களை சமர்ப்பிக்க தொழிற்சங்கங்களுக்கு அடுத்த மாதம் முதல் வாரம் வரை காலம் வழங்க வேண்டும். 

தொழில் சட்டத்தை சமர்ப்பிப்பதை தாமதப்படுத்தும் நோக்கில் குறித்த திருத்தங்களை சமர்ப்பிக்கும் நடவடிக்கையை தாமதப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

தொழில் சட்டம் தொடர்பில் இன்னும் இரண்டுவாரங்களில்  கருத்துப் பத்திரம் ஒன்றுக்கு அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொள்வோம். 

இதுவரை அதிகமான தொழில் சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களின் கருத்துக்களை அது தொடர்பில் சமர்ப்பித்திருக்கின்றன.

இதற்கு சமமாக சட்ட வரைபு திணைக்களத்துடன் இணைந்து பிரேரணைகளை வரைபு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட இருக்கிறது. 

சட்ட வரைபு திணைக்களத்தினால் சட்ட மூலம் தயாரிக்கப்பட்ட பின்னர், அதுவும் மக்கள் கருத்தை பெற்றுக்கொள்வதற்காக பகிரங்கப்படுத்தப்படும். 

தொழில் சங்கங்களினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் திருத்தங்களும் சட்ட வரைபு திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கப்படும் - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image