ஆசிரியர் - அதிபர்களின் சம்பளம் தொடர்பில் வௌியான தகவல்

ஆசிரியர் - அதிபர்களின் சம்பளம் தொடர்பில் வௌியான தகவல்
ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்காக சுமார் 42 பில்லியன் ரூபா நிதி அவசியம் என அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளதாக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
 
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் அந்த சம்மேளனத்தின் பிரதிநிதி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
 
25 ஆண்டு காலமாக நிலவும் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வாக நிலுவை சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை வழங்குவதற்கு கடந்த ஆண்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
 
அதில் எஞ்சியுள்ள மூன்றில் இரண்டு பங்கு சம்பளத்தை பெற்றுக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க சம்மேளனம் கல்வி அமைச்சரை அண்மையில் சந்தித்திருந்தது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image