பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் ஆராய சட்டத்தரணிகள் சங்கத்தினால் குழு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் ஆராய சட்டத்தரணிகள் சங்கத்தினால் குழு

வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக சிரேஷ்ட சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சட்டமூலத்தில் சிக்கல்கள் காணப்படுவதாக குறித்த குழு பரிந்துரைக்கும் பட்சத்தில் அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்தார்.

இதனிடையே, சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளுக்கு அமைவாக இந்த சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மூலம் - நியூஸ்பெஸட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image