தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளின் கலந்துரையாடல் ஆரம்பம்!

தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளின் கலந்துரையாடல் ஆரம்பம்!

அனைத்து துறை தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (03) பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

நிபுணர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கை மற்றும் புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்பாக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் இக்கலந்துரையாடலில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.

அதற்கு மேலதிகமாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் புதிய பயங்கரவாக தடுப்புச் சட்டம் தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்றும் அமைக்கப்படவுள்ளது.

மேலும், இந்த கலந்துரையாடலில் புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ஆராய்வதற்காக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நியமித்துள்ள குழுவின் கருத்துக்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஜனநாயக உரிமைகளை பலவீனப்படுத்தும் வகையிலான மிக பயங்கரமான சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்ற முயல்வதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூதிய தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image