நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்கு இலங்கை தேயிலை நன்கொடை
நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்கு இலங்கை தேயிலை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
தேயிலைத் தொகை துருக்கிக்கான தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட தேயிலையே துருக்கி மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம், வௌிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை தேயிலைச் சபை ஆகியன இந்த நன்கொடைக்கான செயற்பாடுகளை ஒருங்கிணைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, துருக்கியின் அதானா நகரிலுள்ள தேயிலை இறக்குமதியாளர் ஒருவர் தமது கையிருப்பில் இருந்த 12,000 கிலோகிராம் தேயிலையை துருக்கி மக்களுக்கு வழங்கியுள்ளதாகவும் மேலும் 42,000 கிலோ தேயிலையை வழங்க தயாராக உள்ளதாகவும் துருக்கிக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.