பாடசாலை விடுமுறை மற்றும் பரீட்சைகள் தொடர்பான அறிவித்தல்

பாடசாலை விடுமுறை மற்றும் பரீட்சைகள் தொடர்பான அறிவித்தல்

நத்தார் தினத்தை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

 

2022 – 3ஆம் தவணைக்கான இரண்டாம் கட்டம் ஜனவரி மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

 
2022 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த (உயர் தரப்) பரீட்சை – 2022 ஆம் ஆண்டில் நடாத்துதல் மற்றும் 2022 பாடசாலை மூன்றாம் தவணையை ஆரம்பித்தல் மற்றும் நிறைவுசெய்தல்
 
2022 ஆம் ஆண்டுக்குரியதான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. (உயர் தரப்) பரீட்சையை கீழ்வரும் வகையில் நடாத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
            தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை             – 2022.12.18
 
            க.பொ.த. (உயர் தரப்) பரீட்சை                            – 2023.01.23 தொடக்கம் 2023.02.17 வரையில்
 
அதனடிப்படையில், கல்வி அமைச்சின் 2022.09.02 ஆம் திகதிய மற்றும் 11ஃ2022(ஐ) இலக்க சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கீழ்வரும் வகையில் திருத்தம் செய்யப்படுகின்றது 
     
சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு:
 
 தவணை இடம்பெறும் காலப்பகுதி
 
இரண்டாம் தவணை 2022.09.13 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 2022.12.01 வியாழக்கிழமை வரையில் (இரண்டு நாட்களும் உள்ளடங்கலாக) (2022.12.02 ஆம் திகதி தொடக்கம் 2022.12.04 ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படும்.)
 
மூன்றாம் தவணை முதலாம் கட்டம் 2022.12.05 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 2022.12.22 ஆம் திகதி வியாழக்கிழமை வரையில் (இரண்டு நாட்களும் உள்ளடங்கலாக) (2022.12.23 ஆம் திகதி தொடக்கம் 2023.01.01 வரையில் நத்தார் விடுமுறை வழங்கப்படும்.)   இரண்டாம் கட்டம் 2023.01.02 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 2023.01.20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையில் (இரண்டு நாட்களும் உள்ளடங்கலாக) (2023.01.21 ஆம் திகதி தொடக்கம் 2023.02.19  ஆம் திகதி வரையில் க.பொ.த (உயர் தரப்) பரீட்சை – 2022 இற்கான விடுமுறை வழங்கப்படும்.)  மூன்றாம் கட்டம் 2023.02.20 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 2023.03.24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையில் (இரண்டு நாட்களும் உள்ளடங்கலாக)
 
முஸ்லிம் பாடசாலைகளுக்கு:
 
தவணை இடம்பெறும் காலப்பகுதி
 
இரண்டாம் தவணை 2022.09.13 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 2022.12.01 வியாழக்கிழமை வரையில் (இரண்டு நாட்களும் உள்ளடங்கலாக) (2022.12.02 ஆம் திகதி தொடக்கம் 2022.12.04 ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படும்.)
மூன்றாம் தவணை முதலாம் கட்டம் 2022.12.05 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 2022.12.22 ஆம் திகதி வியாழக்கிழமை வரையில் (இரண்டு நாட்களும் உள்ளடங்கலாக) (2022.12.23 ஆம் திகதி தொடக்கம் 2023.01.01 வரையில் நத்தார் விடுமுறை வழங்கப்படும்.)   இரண்டாம் கட்டம் 2023.01.02 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 2023.02.15 ஆம் திகதி புதன்கிழமை வரையில் (இரண்டு நாட்களும் உள்ளடங்கலாக) (2023.02.16 ஆம் திகதி தொடக்கம் 2023.02.28  ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படும்.)    மூன்றாம் கட்டம் 2023.03.01 ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் 2023.03.21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரையில் (இரண்டு நாட்களும் உள்ளடங்கலாக)
 
மூலம் - நியூஸ்.எல்.கே

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image