வைத்தியர்களின் ஓய்வு வயது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு

வைத்தியர்களின் ஓய்வு வயது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு

 மருத்துவர்களுடைய கட்டாய ஓய்வுபெறும் வயது திருத்தம் செய்யப்பட்டு விசேட வர்தமானி அறிவித்தல் இன்று (15) வௌியிடப்பட்டுள்ளது.

அரச நிருவாக சுதேச அலுவல்கள் அமைச்சர் என்றவகையில் பிரதமர் தினேஸ் குணவர்தன இவ்விசேட வர்த்மானி அறிவித்தலை வௌியிட்டுள்ளனர்.

அவ்வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, தற்போது பணியில் உள்ள 63 வயது பூர்த்தியடைந்த அனைத்து மருத்துவர்களும் இவ்வாண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி ஓய்வு பெறல் வேண்டும்.

தற்போது 62 வயது பூர்த்தியடைந்துள்ள அனைத்து மருத்துவர்களும் 63ம் வயதில் சேவையில் இருந்து ஓய்வு பெற வேண்டும்.

தற்போது 61 வயது பூர்த்தியடைந்த அனைத்து மருத்துவர்களும் 62வது வயதில் ஓய்வு பெறல் வேண்டும்.

தற்போது 60 வயது பூர்த்தியடைந்த அனைத்து மருத்துவர்களும் 61 வயதில் ஓய்வு பெற வேண்டும்.

59 வயது பூர்த்தியடைந்த அனைத்து மருத்துவர்களும் 60வது வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று அவ்வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வர்த்தமானி அறிவித்தல் இந்த இணைப்பில்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image