அதிபர்கள், ஆசிரியர்களின் தரவுகள் ஒரே கட்டமைப்பில்

அதிபர்கள், ஆசிரியர்களின் தரவுகள் ஒரே கட்டமைப்பில்

அதிபர்களினதும், ஆசிரியர்களினதும் தரவுகளை ஒரே கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கான வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் ஆசிரிய - அதிபர் இடம்மாற்றம், பதவி உயர்வு உள்ளிட்ட சகல விடயதானங்களையும் தொழிநுட்ப முறைமையின் அடிப்படையில் உள்ளடக்குவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழிநுட்ப ரீதியிலான கல்வி முறைமையினை மேம்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில் அமைச்சரவை அனுமதியினை பெற்றுக்கொள்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம்.

ஆயிரம் பாடசாலைகளுக்கு புதிதாக இணைய வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக பாதீட்டில் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் எந்தவொரு பாடசாலையும் தனித்துவிடப்படாமல் அனைத்தையும் ஒன்றிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

மூலம் - சூரியன் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image