ஆடை வி்வகாரத்தில் ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படுமா? கல்வி அமைச்சர் விளக்கம்

ஆடை வி்வகாரத்தில் ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படுமா? கல்வி அமைச்சர் விளக்கம்

ஆசிரியர்களின் ஆடை விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இன்று நாடாளுமன்றில் கருத்து வௌியிட்டார்.

தங்களுக்கு சேலையை வாங்குவது கஷ்டம் என்றோ அல்லது சேலை அணிய முடியாது என்றோ இந்த நாட்டில் எங்கேனும் ஆசிரியர்கள் கூறவில்லை என கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

2019 ஆம் ஆண்டு கொவிட் நிலைமையுடன், நாடு முடக்கப்பட்டிருந்ததுடன், இடைக்கிடையே பாடசாலைகளைளும், காரியாலயங்களும் மூடப்பட்டிருந்தன.  இதனால், இலகுபடுத்தலுக்காக, கொவிட் காலத்தில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

ஒழுக்க விதிக் கோவை ஒன்று உள்ளமை ஆசிரியர் சேவையில் ஈடுபடும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தெரியும். ஆசிரியர்கள் எவ்வாறு பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும், எவ்வாறு செயற்பட வேண்டும், தமது ஆடை எவ்வாறு இருக்க வேண்டும் என்று அந்த ஒழுக்க விதிக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சேலை அணிய வேண்டும் என அதில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

மேலும் செய்திகள் அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்றறிக்கையை இரத்தாக்க நடவடிக்கை - பிரதமர்

ஆசிரியைகளின் ஆடை விவகாரமும் - ஏற்பட்டுள்ள சமகால நிலைமையும்

 ஆனால், ஆசிரியர்களின் கௌரவத்தைப் பாதுகாத்து இந்த செயற்பாடு இடம்பெற வேண்டும் என்றே இவை அனைத்தின்மூலமும் கூறப்படுகிறது.  இதற்கு தாம் முழுமையாக இணங்குவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அந்த சுற்றறிக்கையை, பொதுநிர்வாக அமைச்சர் என்ற அடிப்படையில் பிரதமர் நீக்குவார். இதன்போது, ஆடை தொடர்பில் பிரச்சினை இருக்காது.

எனினும், கஷ்டமானவர்களுக்கு கொடுப்பனவை வழங்க அரசாங்கத்தினால் தற்போது புதிதாக நிதியை ஒதுக்க முடியாது. ஆனால், ஏதேனுமோர் மாற்று வேலைத்திட்டத்திற்கான நடவடிக்கைகளை தயார்ப்படுத்துவதாகவும், இறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் அதனை அறியத்தருவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image