மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கத்திற்கு எதிரான தொழிற்சங்க நடவடிக்கை வெற்றி.

மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கத்திற்கு எதிரான தொழிற்சங்க நடவடிக்கை வெற்றி.

மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கத்தில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துள்ள அனைத்து அடக்கு முறைக்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேற்கொண்ட தொழில் சங்க நடவடிக்கை அடிப்படையில் மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கத்துடனான கலந்துராயாடலில் தீர்வுகள் பல எட்டப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் நேற்றைய தினம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கத்திற்கும் இடையிலான கலந்துரையாடலொன்று கொட்டகலை CLF வளாகத்தில் இடம்பெற்றது .

மேலும் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக இடம்பெற்ற தொழிற்சங்க நடவடிக்கையில் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம் கம்பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடிய தொழிற்சங்க நடவடிக்கை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேற்கொண்டது.

இதன் விளைவாக மக்களை அடக்கி ஆள நினைத்த மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிடம் சரணடைந்து பேச்சுவார்தைக்கு வந்தது.

இந்த பேசுவார்த்தையில் கலந்துக் கொண்டு உரையாற்றிய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்ததாவது.

எங்களுடைய தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதை நிறுத்த வேன்டும் அதை மீறும் போது அதற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.

மேலும் பேச்சுவார்த்தையின் போது தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நாட்சம்பளம், ஏனைய பல சலுகைககள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம் அக்கோரிக்கைகளுக்கு மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கங்கள் இனங்குவதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கம் இ.தொ. காவிடம் உறுதியளித்த அனைத்து விடயங்களையும் எழுத்து மூலம் அறிவித்த பின்னரே தொழில் போராட்டத்தை கைவிடுவாதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்பீடம் மஸ்கெலியா யாக்கத்தின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தனர்.

இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயாலாளர் ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன்,பிரதி தலைவர்களான அனுஷா சிவராஜா, கணபதி கனகராஜ், தேசிய அமைப்பாளர் ஏ.பி சக்திவேல் மற்றும் இ.தொ.காவின் முக்கிய பிரமுகர்கள் , தோட்ட தலைவர், தலைவிகள் மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கத்தின் நிறைவேற்று பணிப்பாளர் விபுல புசலாவ, தோட்ட முகாமையாளர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image