ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவன ஊழியர்கள் மதிய உணவின் போது ஆர்ப்பாட்டம்!

ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவன ஊழியர்கள் மதிய உணவின் போது ஆர்ப்பாட்டம்!

இலங்கை டெலிகொம் நிறுவனத்தினை விற்பனை செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று அனைத்து நிறுவனத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து அடையாள போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளன.

மதிய உணவுவேளையில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் நாடு முழுவதிலும் உள்ள டெலிகொம் கிளைக்காரியாலய ஊழியர்கள் குறித்த நேரத்தில் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

டெலிகொம் நிறுவனத்தை விற்பனை செய்வது ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தமது பிள்ளைகள் குடும்பத்துடன் நடுத்தெருவில் நிற்க வைக்க எடுக்கும் முயற்சியாகவே நாம் பார்க்கிறோம். எதிர்வரும் திங்கட் கிழமை நாடு முழுவதிலும் உள்ள கிளைக்காரியாலய ஊழியர்களை கொழும்புக்கு அழைப்பித்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் அனைத்து தொழிற்சங்கங்களுடனும் இணைந்து தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தையும் முன்னெடுக்கவுள்ளதாக ஶ்ரீலங்க டெலிகொம் நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் அதுல பொதேஜூ தெரிவித்துள்ளார்.

மேலும் பல குடும்பங்களை வாழ வைக்கும் லாபமீட்டும் டெலிகொம் நிறுவனத்தை விற்று பிழைக்க எடுக்கும் முயற்சியை உனடியாக நிறுத்துமாறு எச்சரித்துள்ள தொழிற்சங்க தலைவர்கள், இன்று எமது நாடு எதிர்நோக்கியுள்ள வங்குலோத்து நிலைக்கு காரணமான, தற்போது வௌிநாடுகளில் ஒழிந்து திரியும் நபர்களிடமிருந்து டொலர்களை மீள பெற்றுக்கொள்ள சட்டரீதியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமக்கு எந்த அச்சுறுத்தல் வந்தபோதிலும் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image