வரி அறவீடு: அரச - தனியார் ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல்

வரி அறவீடு: அரச - தனியார் ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல்

வருமானம் ஈட்டும் போது செலுத்தப்படும் வரி என்ற தனிநபர் வருமான வரியை நாடாளுமன்ற அனுமதியின் பின்னர் நடைமுறைபடுத்துவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

ருவான்வெல்ல பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசதுறை, தனியார்துறை மற்றும் பகுதிநிலை அரச துறையில் மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக வேதனத்தை பெறுபவர்களிடம் இந்த வரி அறவிடப்படும்.

எண்ணிக்கை அடிப்படையில், சுமார் 30 இலட்சம் பேரில் ஒரு இலட்சத்து 9 ஆயிரம் வரையிலானோரே மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக வருமானத்தை ஈட்டுகின்றனர்.

இந்தநிலையில் குறித்த சட்டமூலம், நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டு அதன் தீர்ப்பின் பின்னர் நிதி தொடர்பான குழுவின் இணக்கப்பாடு எட்டப்படும்.

அதன்பின்னர், குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, எதிர்வரும் ஜனவரி மாதம், முதலாம் திகதியிலிருந்து இந்த வரி அறிவிடப்படும்.

எனவே, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் குறித்த வரி அறிவிடப்படமாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

மூலம் - சூரியன் செய்திகள் 

ஆசிரியர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுக்கும் அறிவித்தல்!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நேர அட்டவணையில் மாற்றம்

அரச ஊழியர்களுக்கு இந்தமாத வேதனம் எப்போது வைப்பிலிடப்படும்?

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image