ஆசிரியர் நியமனம் குறித்து கல்வி அமைச்சரின் புதிய அறிவித்தல்

ஆசிரியர் நியமனம் குறித்து கல்வி அமைச்சரின் புதிய அறிவித்தல்
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றில் விளக்கமளித்துள்ளார்.
நேற்றைய பாராளுமன்ற அமர்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்களுக்கமைய. கல்வியல் கல்லூரி ஊடாக 8000 நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கான பரீட்சைகள் நடத்தப்பட்டு முடிவுறுத்தப்படவுள்ளன.
 
22 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக பாடசாலைகளுக்கு உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் அடுத்த வாரம் அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்ததன் பின்னர் 53,000 பேர் அதாவது 2018 2019 2020 ஆகிய மூன்று வருடங்களில் திட்டத்தில் உள்ளீர்க்கப்பட்ட பட்டதாரிகளுக்கு பொதுவான பரீட்சை ஒன்றை நடத்தி அதன் புள்ளிகளின் அடிப்படையில் மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் நியமனங்களை வழங்க தற்போது நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
 
அத்துடன் மாகாண சபைகள் ஊடாக தனித்தனியே பட்டதாரிகள் உள்ளீர்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் முதலாம் தவணை ஆரம்பிக்கும்போது இதனை இறுதிப்படுத்த முடியும் என நம்புவதாக கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image