அத்தியவசிய சேவை சட்டதிட்டங்கள் மீறப்பட்டால் சட்ட நடவடிக்கை

அத்தியவசிய சேவை சட்டதிட்டங்கள் மீறப்பட்டால் சட்ட நடவடிக்கை

பெற்றோலியம் தொடர்பான சேவைகள் அத்தியவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் மற்றும் தொழிற்சங்க அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பெற்றோலியம் தொடர்பான சேவைகள் 6 மாதங்களுக்கு முன்னரே அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முழுமையான தடயவியல் தணிக்கைக்கு எதிராக பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க பல பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

எனவே, சேவையில் ஏற்படும் இடையூறுகளுக்கு உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்திய அமைச்சர், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image