அரச ஊழியர்கள் சார்பில் நிதி அமைச்சிடம் முன்வைக்கப்பட்ட விசேட கோரிக்கை!

அரச ஊழியர்கள் சார்பில் நிதி அமைச்சிடம் முன்வைக்கப்பட்ட விசேட கோரிக்கை!

அரச ஊழியர்கள் சார்பில் நிதி அமைச்சிடம் அரச ஊழியர்களின் தொழிற்சங்க சம்மேளனங்கள் விசேட கோரிக்​கைகளை முன்வைத்துள்ளது.

அரச ஊழியர்களின் பொருளாதார நெருக்கடி நிலைமையை தீர்ப்பதற்கு அரசாங்கம் நேரடியாக தலையீடு செய்ய வேண்டும் என அரச ஊழியர்களின் தொழிற்சங்க சம்மேளனங்கள் நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

அரச ஊழியர்களின் தொழிற்சங்க சம்மேளனங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நேற்று (10) நிதி அமைச்சுக்கு சென்று கடிதம் ஒன்றை சமர்ப்பித்து நிதி அமைச்சிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

வேதனம் மற்றும் வாழ்க்கை செலவீன கொடுப்பனவினை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தினை ஏற்றுக்கொண்டுள்ள நிதி அமைச்சு விரைவில் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்து தருவதாக சம்மேளனங்களின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களிடம் உறுதியளித்துள்ளது

இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டின் பின்னர் அரச சேவையாளர்களுக்கு வேதன அதிகரிப்பு மேற்கொள்ளப்படாமையினால் பணிக்கு சென்று திரும்புவதற்கேனும் வேதனம் பற்றாக்குறையாக காணப்படுவதாக சம்மேளனத்தின் உறுப்பினர் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ளார்.

நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதோடு, அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளமையினால் அரச சேவையாளர்களுக்கு கிடைக்கின்ற வேதனம் குறைந்த பட்ச தேவைகளையேனும் பூர்த்தி செய்வதில்லை என குறித்த நபர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

20,000 இற்கும் அதிகமான ஆசிரியர் வெற்றிடம் 8,000 ஆக எவ்வாறு குறைந்தது?

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image