அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு நிறுத்தம் - சம்பளத்துக்கு மேலதிகமான கொடுப்பனவுகள் குறித்தும் தீர்மானம்?

அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு நிறுத்தம் - சம்பளத்துக்கு மேலதிகமான கொடுப்பனவுகள் குறித்தும் தீர்மானம்?

2023 ஆம் ஆண்டில் அரச சேவைக்கு புதிய ஆட்சேர்ப்புகள் இடம்பெறாது என்பதால், அதற்காக அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், சம்பளத்திற்கு மேலதிகமாக வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் தொடர்பில் தற்போது நடைமுறையாகும் சுற்றறிக்கை அடுத்த வருடத்திலும் அவ்வாறே நடைமுறை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 2003 ஆம் ஆண்டிலும் அவ்வாறே நடைமுறையில் இருக்கும் என்பதுடன், அரச நிறுவனங்களுக்கான புதிய காரியாலய உபகரணங்கள் மற்றும் உதிரி பாகங்களை கொள்வனவு செய்வதும் கைவிடப்பட்டுள்ளது.

திறைசேரி செயலாளர் கே எம் மஹிந்த சிறிவர்தனவினால் வெளியிடப்பட் தேசிய வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கை இலக்கம் 05/2022 ஊடாக இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சினையில் மீள்வதற்காக அவதானம் செலுத்த வேண்டியுள்ள 17 விடயங்களை உள்ளடக்கிய அந்த சுற்றறிக்கை அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பிரதான செயலாளர்கள் திணைக்கள பிரதானிகள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் PTA ஐ நீக்கக்கோரி நாடுதழுவிய ஊர்திவழி கையெழுத்துப் போராட்டம் யாழில் ஆரம்பம்

அபிவிருத்திக்குத் தடையாக உள்ள சுற்றறிக்கைகளை திருத்த ஜனாதிபதி உத்தரவு

பெருந்தோட்டங்களில் உணவு உற்பத்திக்கு காணி வழங்க கம்பனிகள் தயார்

அரச ஊழியர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு நிலுவை ரூ.1550 கோடி

அரச செலவுகளை கட்டுப்படுத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ள வரவுசெலவுத்திட்ட சுற்றறிக்கை 03/2022 ஏற்பாடுகளை கடுமையாக அமுலாக்கல், ஒருங்கிணைந்த நிதியத்தில் சம்பளம் வழங்கும் பதவிக்காக புதிய ஆட்சேர்ப்புக்களை கைவிடுதல், அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் அளவு தொடர்பான சுற்றறிக்கையை மீறி செயல்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த அனுமதி மட்டுப்பாடுகளுக்கு அமைய மதிப்பீடுகளை செய்தல், 2022ஆம் ஆண்டு திருத்தப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மதிப்பீட்டிற்கு அமைய, விடயங்களுக்கு அமைய ஒட்டுமொத்த செலவு நூற்றுக்கு ஐந்து சதவீதத்தை விடவும் அதிக செலவு ஏற்படுகின்ற  நிறுவனங்களின் செலவுகள் தொடர்பில் விசேட மீளாய்வுகளை நடத்தி செலவுகளை குறைப்பதற்காக முறைமைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் திறைசேரி செயலாளர் அந்த சுற்றறிக்கையின் மூலம் கவனம் செலுத்தியுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image