அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை குறைப்பு

அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை குறைப்பு

அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை குறைக்கப்பட்டுள்ளது.

 

2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றியபோது, நிதி அமைச்சரான  ஜனாதிபதி ரணில் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 

வினைத்திறன்மிக்க செலவு முகாமைத்துவத்தின் ஒரு பகுதியாக அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையினை சீர்செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.  

 

இதன் முதற்கட்டமாக 5 வருட காலத்திற்கு சம்பளமற்ற   விடுமுறையினைப் பெற்றுக்கொண்டு வெளிநாடு செல்வதற்கு அல்லது பல்வேறு  பொருளாதார  நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு   விரும்புகின்ற அரசாங்க ஊழியர்களுக்கு நாம் தற்பொழுது  அனுமதி வழங்கியுள்ளோம்.

 

அரசாங்க சேவையிலுள்ள பதவியினரின் ஓய்வூதியம் பெறும் வயதினை 65 வரையும் பகுதியளவு அரச  சேவையிலுள்ள அலுவலர்களின் ஓய்வூதியம் பெறும் வயதினை 62 அதிகரித்ததனால் சமூகத்தில் வேலையற்ற இளைஞர்களின் விரக்திநிலை அதிகரித்துவருகின்றமை தெரியவந்துள்ளது.

 

அதேபோன்று, பெரும்பாலான  பதவிகளில்   பதவியுயர்வு வழங்குகின்றபோது ஓய்வூதியம் பெறும் வயது அதிகரித்ததன் மூலம் பதவியுயர்வினை எதிர்பார்த்துள்ள பெரும் எண்ணிக்கையிலான அலுவலர்களுக்கு அச்சந்தர்ப்பத்தினைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது.

 

எனவே, இந்நிலையினை சீர்செய்வதற்கு ஓய்வூதியம்  பெறும் வயது 60 ஆகக்  குறைக்கப்படுகிறது.  அதேபோன்று,  தற்பொழுது  அரசாங்க மற்றும் பகுதியளவு அரச  சேவையிலுள்ள 60 வயதினை பூர்த்தி செய்து பணியில் ஈடுபட்டு  வருகின்ற அனைத்து  அரசாங்க மற்றும் அரச சார்பு ஊழியர்கள் 2022.12.31 ஆந் திகதிமுதல் பயன்வலுப்பெறும் வகையில் ஓய்வுறுத்தப்படுவர் என நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image