வெளிநாட்டு தொழிலுக்கு செல்வோர் விரைவில் கடவுச்சீட்டுபெற விசேட கருமபீடம்

வெளிநாட்டு தொழிலுக்கு செல்வோர் விரைவில் கடவுச்சீட்டுபெற விசேட கருமபீடம்

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்பவர்கள் விரைவாக தமது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கு வசதியாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் விசேட கருமபீடமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குடிவரவு - குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த விசேட கருமபீடத்தை ஸ்தாபிக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அனுமதியளித்திருந்தார்.

முன்னோடி திட்டங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல விரும்பும் அனைத்து இலங்கையர்களுக்கும் வசதியாக நேற்று முன்தினம் (23) முதல் இந்த விசேட கருமபீடத்தை திறக்க தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இருந்து தமது வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான கடிதத்தைப் பெற்றுக்கொண்ட விண்ணப்பதாரர்கள், அதற்கான தமது ஆரம்பச் செயற்பாடுகளை நிறைவுசெய்த பின்னர், இந்த விசேட கருமபீடத்தில் ஆவணத்தை சமர்ப்பிப்பதன் மூலம் தமது கடவுச்சீட்டை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

May be an image of 12 people, people standing and indoor

May be an image of 8 people and people standing

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image