உலக உணவு பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கான இடம்!

உலக உணவு பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கான இடம்!

உலக உணவு பண வீக்கம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 5ம் இடத்தை பிடித்துள்ளது என உலக வங்கி அறிவித்துள்ளது.

லெபனான், சிம்பாபே, வெனிசுவெலா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இலங்கையை விட அதிக உணவு பணவீக்கம் உள்ள நாடுகளாக அடையாளங்காணப்பட்டுள்ளன.

இதேவேளை, இலங்கையில் பணவீக்கம் இறங்குமுகத்தை நோக்கி செல்வதற்கான சாத்தியங்கள் தோன்றியுள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹோப்பிங் பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹன்கே தெரிவித்துள்ளார்.

ஸ்டீவ் ஹன்கேவின் புதிய பணவீக்க தரவுகளுக்கமைய இலங்கை நான்கு இடங்கள் பின்னோக்கிச் சென்றுள்ளது.

கடந்த காலங்களில் இலங்கை இரண்டாம் இடத்தை பிடித்திருந்தது. முதலாம் இடத்தில் சிம்பாபே இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image