பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளர் வழங்கிய பதில்

பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளர் வழங்கிய பதில்

ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று் கல்வி அமைச்சின் செயலாளர் கபில் பெரேராவை சந்தித்து.

இன்று நாடளாவிய ரீதியில் அதிபர் - ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை அறிக்கையிட்டு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பினர் கல்வி அமைச்சுக்கு சென்று கல்வி அமைச்சின் செயலாளரை சந்தித்திருந்தனர். இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,

கல்வியமைச்சின் செயலாளருக்கு இந்த எதற்குமே பதில்ளிக்க முடியாத நிலை இருக்கின்றது. ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக இன்று கல்வி அமைச்சின் செயலாளர் கூறுகின்றார். எனவே ஆசிரியர்கள் போராட்டம் செய்யாமல் இருக்கவேண்டும் என்று சொல்கின்றார். அதிகரித்த சம்பளம் போதாது என்று நாங்கள் சொல்கின்றோம். எங்களுக்கு சம்பளம் அதிகரித்து இருந்தாலும் ஒட்டு மொத்த அரச ஊழியர்களுக்கும் என்ன நடக்கின்றது?

எங்களுக்கு மூன்றில் ஒரு பங்கு சம்பள உயர்வை வழங்கினார். அதுவே போதாது என்ற நிலை இருக்கும்போது, ஏனையவர்கள் எவ்வாறு வாழ்க்கை நடத்துவார்கள்? எந்தவிதமான ஒரு தொழிலையும் செய்யாதவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள். மீனவர்கள் ஆகியோருக்கு என்ன நடக்கும்? அவர்களின் குடும்பங்களுக்கு என்ன நடக்கும்? எந்தவிதமான தொழிலிலும் தொழிலையும் செய்யாதவர்களுக்கு நிலை என்ன? எனவே அவர்களுக்காக முன்னிற்கவேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது.

பாடசாலை கட்டமைப்பு வழமைபோல இயங்கியதாக இன்று கல்வி அமைச்சர் கூறுகின்றார். எங்களுடைய பணி புறக்கணிப்பு நூற்றுக்கு நூறு வீதம் வெற்றி அளித்துள்ளது. உங்களை அமைச்சராக நியமித்தது தவறான முறையிலாகும் அந்தக் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தஞகொண்டு நீங்கள் பொய் சொல்ல வேண்டாம்.

மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கான ஒரு சூழல் இல்லை. மாணவர்களுக்கு புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றது.. பயிற்சிக் கொப்பிகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எவ்வாறு கல்வி கற்பார்கள்? அரசாங்கம் முதலில் இவற்றின்  விலையை குறைக்க வேண்டும். மாணவர்களுக்காக தான் நாங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றோம். - என்றார்.

போராட்டம் 100% வெற்றி: அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு விசேட அறிவித்தல்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image