ஊழியர்களை வீடுகளிலிருந்து பணி புரியுமாறு ஆலோசனை

ஊழியர்களை வீடுகளிலிருந்து பணி புரியுமாறு ஆலோசனை

ஊழியர்களை இன்று (07) முதல் வீடுகளிலிருந்து பணி புரியுமாறு அரச நிறுவனம் ஒன்று ஆலோசனை வழங்கியுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்களை இன்று (07) முதல் வீடுகளிலிருந்து பணி புரியுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஊழியர்களின் போக்குவரத்துக்கு தேவையான எரிபொருள் இன்மையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரச பையின் உப தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்தார்.

அதனடிப்படையில், அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

விமான நிலையத்திற்கு தேவையான எரிபொருளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை என ரஜீவ் சூரியாராச்சி கூறினார்.

எவ்வாறாயினும், விமான நிலையத்தின் ரேடார் (Radar) கட்டமைப்பு உள்ளிட்ட அத்தியாவசிய சேவையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான எரிசக்தியை இடையூறியின்றி பெற்றுக்கொள்ள முடிவதாக அதன் உப தலைவர் தெரிவித்தார்

இதனிடையே, விமானங்களுக்கான எரிபொருள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.

நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image