திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில், பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்

திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில், பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்

புத்தாண்டு காலப்பகுதியில் கடைகள் மற்றும் வீதிகளில் ஏற்படக்கூடிய திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

 பெறுமதி மிக்க உபகரணங்கள் மற்றும் வாகனங்களைப் பாதுகாப்பது தொடர்பில் பொதுமக்கள் இக்காலப்பகுதியில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். போதைப்பொருளுக்கு அடிமையான சிலர் திட்டமிட்ட வகையில் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். விசேடமாக தாம் மேற்கொள்ளும் பயணங்களின் போது மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமென்றும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசாங்க தகவல் இணையம்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image