'பாரபட்சங்களைத் தகர்ப்போம்' சர்வதேச மகளிர் தின நிகழ்வு

'பாரபட்சங்களைத் தகர்ப்போம்' சர்வதேச மகளிர் தின நிகழ்வு

ஹட்டன் சமூக நல நிறுவகத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு 'பாரபட்சங்களைத் தகர்ப்போம்' என்ற தொனிப்பொருளின் கீழ் ஹட்டனில் நடைபெற்றது.

ஹட்டன் சமூக நல நிறுவகத்தின் பணிப்பாளர் அருட்தந்தை பிரேம்குமார் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சி.யோகித்தா ஆகியோரின் தலைமையில் ஹட்டன் சமூக நல நிறுவகத்தின் மகளிர் தின விழா கடந்த 13 ஆம் திகதி ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை ஹட்டன் விடிவெள்ளி மகளிர் மன்றம் ஏற்பாடு செய்திருந்தனர்.

தொழிலாளர்களின் பிரச்சினைகள், அத்தியாவசிய பொருட்களுக்கான விலைவாசி அதிகரிப்பு, கல்வி தொடர்பான பிரச்சினைகள், சிறுவர், பெண்கள் உரிமைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி பேரணியாக சென்றனர்.

ஹட்டன் சமூக நல நிறுவன காரியாலயத்திற்கு முன்பாக ஊர்வலம் ஆரம்பமாகி ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மண்டபத்தை சென்றடைந்ததும் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

இந்த நிகழ்வில் பேராதனை பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், மனித உரிமை மீறல்க்கான செயற்பாட்டாளருமான சோபனா தேவி, ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவிற்கான பொறுப்பதிகாரி குமாரி விஜயசிங்க, ஹட்டன் கல்வி வலய பணிமனையின் ஆசிரிய ஆலோசகர் ஏ.தமயந்தி, இலங்கை இயேசு சபையின் முதல்வர் டெக்ஸ்டர் கிரே மலையக மகளிர் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

DSC07866.jpg

DSC07874.jpg

DSC07893.jpg

DSC07858.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image