பாடசாலை ஆரம்பிக்க முன்னர் பிள்ளைகளை தௌிவுபடுத்துங்கள் - பெற்றோரிடம் கோரிக்கை

பாடசாலை ஆரம்பிக்க முன்னர் பிள்ளைகளை தௌிவுபடுத்துங்கள் - பெற்றோரிடம் கோரிக்கை

எதிர்வரும் வாரம் பாடசாலை ஆரம்பிக்கவுள்ள நிலையில் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் பிள்ளைகளை தௌிவுபடுத்துமாறு சுகாதார பிரிவு பெற்றோர் மற்றும் பாதுகாவலரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுகாதார ஊக்குவிப்பு காரியாலயத்தில் நேற்று (04) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் கருத்து வௌியிட்ட சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் பூஜித்த விக்கிரமசிங்க கருத்து தெரிவிக்கையில், பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை காணப்படுவதால் கொவிட் உட்பட ஏனைய வைரஸ் தொற்றுக்கள் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதனால் அவதானத்துடன் இருக்குமாறு கூறியுள்ளார்.

ஒன்றுகூடல் நிகழ்வுகள் தொடர்பில் PHI விடுத்துள்ள அறிவித்தல்

 பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நான்காவது தடுப்பூசியை வழங்க முடிவு

பி.சி.ஆர் பரிசோதனை தொடர்பில் புதிய சுற்றுநிரூபம்

மேலும், பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வீதிகளில் சனநெருக்கடி அதிகமாகும். போக்குவரத்து அதிகரிக்கும். அத்துடன் கொவிட் வைரஸ் ​போன்றே தற்போது காணப்படும் ஏனைய தொற்று நோய்கள் விரைவில் பரவக்கூடும். குறிப்பாக வயிற்றுப்போக்கு நோய் வேகமாக பரவுவதை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அத்துடன் சுவாசம் தொடர்பான நோய்களும் ஓரளவுக்கு பரவுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இந்நிலையில் நாம் கொவிட் தொற்று தொடர்பில் அவதானம் செலுத்தினால் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருப்பதுதான் முக்கியம். எனவே சுகாதார அமைச்சு வழங்கியுள்ள சுகாதார நடைமுறைகளை ஒழுங்காக பின்பற்றுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image