மின்சாரத்தடையினால் கொவிட் தடுப்பூசிகள் பாதிக்கப்படும் நிலை - உபுல் ரோஹன

மின்சாரத்தடையினால் கொவிட் தடுப்பூசிகள் பாதிக்கப்படும் நிலை - உபுல் ரோஹன

தற்போது நாட்டில் மின்வெட்டு காரணமாக கொவிட் தடுப்பூசிகள் பழுதடையும் சாத்தியம் காணப்படுவதாக பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகள் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் இடங்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்காவிடின் அவை பழுதடையும் சாத்தியம் உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 நாடு முழுவதிலும் உள்ள MOH அலுவலகங்களில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகள் மின்வெட்டுக் காலத்தில் இயங்கவில்லை என்று ரோஹன தெரிவித்தார்.

 பெரும்பாலான MOH அலுவலகங்களில் ஜெனரேட்டர்கள் இல்லை. அவ்வாறு ஜெனரேட்டர்கள் உள்ள நிறுவனங்கள் கூட எரிபொருளை வாங்குவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பைசர் தடுப்பூசியானது மிகக்குறைந்த வெப்பநிலையில் களஞ்சியப்படுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்படும் போது சேமிப்பு அலகுகளின் வெப்பநிலை எங்களுக்குத் தெரியாது.

ஆனால் பைசரை சேமித்து வைப்பதற்கு இது உகந்த சூழ்நிலை இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த விகிதத்தில், தடுப்பூசிகளின் செயல்திறனில் ஏதேனும் ஏற்பட்டால் மக்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள விரும்பமாட்டார்கள்.

 

பதவியில் இருப்பவர்கள் இதை சிந்திக்க வேண்டும்,'' எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக விதிக்கப்பட்டுள்ள மின்வெட்டுகளில் இருந்து மருத்துவமனைகளுக்கு விலக்கு அளிக்குமாறு சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் பல அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ரோஹன தெரிவித்தார்.

நான்கு மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு வைத்தியசாலைகளில் நெருக்கடியை ஏற்படுத்தும் என ரோஹன தெரிவித்தார்

எம்மிடம் ஜெனரேட்டர்கள் இருக்கலாம், ஆனால் ஜெனரேட்டர் பழுதடைந்தால் என்ன ஆகும். எல்லா மருத்துவமனைகளிலும் எங்களிடம் மாற்று வழிகள் உண்டா? இது மிகவும் தீவிரமான நிலை.

அனைத்து தடுப்பூசி களஞ்சியப்படுத்தல் நிலையங்களுக்கும் ஜெனரேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன என்று சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image