கல்வி கூட்டுறவு பொது சேவையாளர் சங்கத்தினர் இன்று பணிப்புறக்கணிப்பு

கல்வி கூட்டுறவு பொது சேவையாளர் சங்கத்தினர் இன்று பணிப்புறக்கணிப்பு

தமக்கு வழங்கப்பட வேண்டிய 10 ஆயிரம் ரூபா மற்றும் அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்ட 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவுகள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்து கல்வி கூட்டுறவு பொது சேவையாளர் சங்கம் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது.

அத்துடன், தமது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றைய தினம் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அந்த சங்கத்தின் தலைவர் நந்தன ஹேவா தெரிவித்தார்.

கல்வி கூட்டுறவு பொது சேவையாளர் சங்கம் உள்ளிட்ட 4 தொழிற்சங்கங்கள் 10 ஆயிரம் ரூபா வேதன கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும் எனக் கோரி 40 நாட்கள் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்திருந்தன.

அதன்பின்னர், விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் லசந்த அலகிவண்ண மற்றும் கூட்டுறவு ஆணைக்குழுவின் அதிகாரிகள் இணைந்து குறித்த கொடுப்பனவு அதிகரிப்பினை வழங்குவதாக உறுதியளித்திருந்தனர்.

எனினும், அந்த கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவித்து, கல்வி கூட்டுறவு பொது சேவையாளர் சங்கம் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது.

நிரந்தர நியமனம் பெறாத, இணைப்புக் கடிதம் கிடைக்காத பட்டதாரிகளுக்கான அறிவித்தல்

பி.சி.ஆர் பரிசோதனை தொடர்பில் புதிய சுற்றுநிரூபம்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image