மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர் நியமனம் தொடர்பில் ஜோசப் ஸ்டாலின்

மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர் நியமனம் தொடர்பில் ஜோசப் ஸ்டாலின்

மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களின் பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு வழங்குவதாக அரசாங்க தரப்பினர் அறிவித்திருந்த போதிலும், இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அவர்கள் ஏற்கனவே பயிற்சியினை நிறைவு செய்துள்ளதால், அவர்களுக்கான நியமனங்கள் காலம் தாழ்த்தப்படாது உடனடியாக வழங்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

மத்திய மாகாணத்தில் 306 ஆசிரியர் உதவியாளர்களின் நியமனம் அண்மையில் பிற்போடப்பட்டது.

அவர்களில் 219 பேர் தமிழ் மொழி மூல ஆசிரிய உதவியாளர்களாகுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தற்களுக்கு விரையில் நியமனம் வழங்குமாறும் வலியுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image