அரச ஊழியர்கள் கட்டாயம் ஓய்வுபெறும் வயதெல்லை - வர்த்தமானி வௌியீடு

அரச ஊழியர்கள் கட்டாயம் ஓய்வுபெறும் வயதெல்லை - வர்த்தமானி வௌியீடு

அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65ஆக அதிகரிப்பதற்கான விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

பொது சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிசபை அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனுடைய கையெழுத்துடன் இவ்வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

இவ்வாண்டுக்கான வரவுசெலவு முன்மொழிவுக்கமைய, அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 65ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, இவ்வாண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் அரச ஊழியர்கள் கட்டாயமாக ஓய்வு பெறும் வயதெல்லை 65 என்று திருத்தம் செய்யப்பட்டு வர்த்மானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள் தமது 55வது வயதில் ஓய்வுபெற முடியும். எனினும் 65 வயதில் ஓய்வு பெறுவது கட்டாயமாகும்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image