ஏழாயிரம் பட்டதாரிகளை கைவிடப்போகிறதா அரசாங்கம்?

ஏழாயிரம் பட்டதாரிகளை கைவிடப்போகிறதா அரசாங்கம்?

அரசாங்கத்தின் 60,000 பட்டதாரிகளை சேவையில் இணைத்தல் திட்டத்தின் கீழ் இதுவரை வாய்ப்புக் கிடைக்காத 7,000 பட்டதாரிகளுக்கும் விரைவில் வாய்ப்பு வழங்குமாறு கோரி நாளை (05) எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது என்று ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வேலையற்ற பட்டதாரிகள் 60,000 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 53,000 பட்டதாரிகள் 3 கட்டங்களாக பயிற்சி சேவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். அவ்வாறு இணைக்கப்பட்டவர்களில் முதற்கட்டமாக இணைக்கப்பட்டவர்கள் ஏற்கனவே ஒரு வருட பயிற்சியை பூர்த்தி செய்துள்ளனர் என்றும் ஏனையோர் இவ்வருடம் மார்ச் மாதம் பயிற்சியை பூர்த்தி செய்வர். எனினும் மிகுதி 7,000 பட்டதாரிகளை சேவையில் இணைப்பதற்கான எவ்வித திட்டமிடலும் இதுவரை காணவில்லை. இது பட்டதாரிகளுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும் என்று மத்திய நிலையத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் கொஸ்வத்த மஹாநாம தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இப்பட்டதாரிகளை விரைவில் பயிலுநர் சேவையில் இணைக்குமாறு கோரி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து அடையாள சத்தியாக்கிரமொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது என்று நிறைவேற்று கொஸ்வத்த மஹாநாம தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image