இடமாற்றப் பட்டியலை வெளியிடுவதில் சுகாதார அமைச்சு இழுத்தடிப்பு

இடமாற்றப் பட்டியலை வெளியிடுவதில் சுகாதார அமைச்சு இழுத்தடிப்பு

வைத்தியர்களுக்கான இடமாற்றப் பட்டியலை வெளியிடுவதை சுகாதார அமைச்சின் அதிகாரிகள் திட்டமிட்டு கால தாமதப்படுத்துகின்றனர். இந்த சர்ச்சைக்கு துரித தீர்வு வழங்கப்படாவிட்டால் சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2022 ஆம் ஆண்டுக்கான வைத்தியர்களின் இடமாற்றப் பட்டியலை வெளியிடும் விவகாரத்தில் சுகாதார அமைச்சின் அதிகாரிகளால் திட்டமிட்டு கால தாமதம் ஏற்பபடுத்தப்படுகிறது.

2022 ஆம் ஆண்டுக்கான இடமாற்றப் பட்டியல் எவ்வாறு அமுல்படுத்தப்படவுள்ளது என்பதை பொது சேவைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அத்தோடு அந்த பட்டியலுக்கமைய ஜனவரி முதலாம் திகதி முதல் இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இது தொடர்பில் அநாவசியமான கேள்விகளை எழுப்பி இதனை திட்டமிட்டு காலம் தாழ்த்துகின்றனர்.

இவ்வாறான திட்டமிட்ட செயற்பாடு;களால் நோயாளர்களே அசௌகரியத்தை எதிர்கொள்ள நேரிடும். எனவே வைத்தியர்களின் இடமாற்ற பட்டியலை தெளிவாக துரிதமாக வெளியிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அவ்வாறில்லை எனில் எதிர்வரும் 3 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுகூட்டத்தில் இது குறித்து தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும். எனவே இந்த பிரச்சினைக்கு துரித தீர்வை வழங்குமாறு சுகாதார அமைச்சை வலியுறுத்துகின்றோம் என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image