நாட்டில் மற்றுமொரு டெல்டா உப பிறழ்வு கண்டுபிடிப்பு

நாட்டில் மற்றுமொரு டெல்டா உப பிறழ்வு கண்டுபிடிப்பு

நாட்டில் மற்றுமொரு டெல்டா உப பிறழ்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட உப பிறழ்வு B. 1.617.2.104 என பெயரிடப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் ஒவ்வாமை, நிர்ப்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர குறிப்பிட்டார்.

B. 1.617.2.104 என்ற உப பிறழ்வு வடக்கு, வட மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

கடந்த ஜூன் மாதத்தின் ஆரம்ப பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் மாதிரிகளூடாக புதிய உப பிறழ்வு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட B. 1.617.2.28 என்ற டெல்டா பிறழ்வை ஒத்த உப பிறழ்வே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதன்படி, நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா திரிபின் இரண்டு இணை பிறழ்வுகள் நாட்டில் இனங்காணப்பட்டுள்ளதாக கலாநிதி சந்திம ஜீவன்தர தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image