வரவு-செலவுத் திட்டத்தில் மலையக மக்களுக்கு நிவாரணம் இல்லை

வரவு-செலவுத் திட்டத்தில் மலையக மக்களுக்கு நிவாரணம் இல்லை

அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மலையக மக்கள் சார்பான எந்த திட்டங்கள், நிவாரணங்களும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

 

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை (15) இடம்பெற்ற 2022ஆம் வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மலையக மக்கள் சார்பான எந்த திட்டங்கள், நிவாரணங்களும் கிடையாது. மலையக மக்களுக்கான வீடமைப்பு திட்டத்துக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு என்ற ஒரு அறிவிப்பு மட்டும் உள்ளது. அதுவும் 3 வருடங்களில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஒரு வீட்டுக்கு 15 இலட்சம் ரூபா அடிப்படையில் பார்த்தாலும் 330 வீடுகள் வரையே நிர்மாணிக்க முடியும். அதுவும் வருடத்துக்கு 110 வீடுகள் என்ற அடிப்படையிலேயே நிர்மாணிக்கப்படும். இதுவா மலையகத்திற்கான அபிவிருத்தி?. 1000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் பந்து விளையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இளைஞர்களுக்கான எதிர்காலம் இல்லை. இந்த நிலையில் மலையகத்தின் கல்வி புரட்சிக்கு நாம் என்ன செய்வது? மலையகத்துக்கான தனி பல்கலைக்கழகம் எங்கே?. வைத்தியசாலைகளின் அபிவிருத்தி எங்கே? வைத்தியர்கள், தாதியர்கள் நியமனங்கள் நிறுத்தப்பட்டது ஏன் என கேட்கின்றோம்.

மேலும் மலையகத்தில் என்னால் ஆரம்பிக்கப்பட்ட பல வீதி அபிவிருத்திப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. பல வீதிகள் மூடப்பட்டுள்ளன. மலையகத்தை ஏன் வஞ்சிக்கின்றீர்கள்?நிதி ஒதுக்கீடுகளில் ஏன் புறக்கணிக்கின்றீர்கள்? ஏன் ஒரே வஞ்சனை செய்கின்றீர்கள்? – என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image