சம்பள அதிகரிப்பல்ல, முரண்பாட்டை தீர்த்தலே எமது கோரிக்கை- முற்போக்கு ஜனநாயக ஆசிரியர் சங்கம்

சம்பள அதிகரிப்பல்ல, முரண்பாட்டை தீர்த்தலே எமது கோரிக்கை- முற்போக்கு ஜனநாயக ஆசிரியர் சங்கம்

எமது சம்பள போராட்டமானது சம்பள அதிகரிப்பிற்கானதல்ல, சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கானது என்று முற்போக்கு ஜனநாயக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

பல்வேறு பரிமாணங்கள் எடுத்துள்ள அதிபர் ஆசிரியர் சங்க போராட்டத்திற்கு அரசாங்கம் உறுதியான தீர்வினை வழங்குவதில் பொய் மெளனம் காத்து வருவதாக முற்போக்கு ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் வே. தினகரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் நேற்று (15) வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அதிபர் ஆசிரியர் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்குப் பதிலாக தேவையில்லாத இழுத்தடிப்புக்களை செய்வதிலும் ஆசிரியர்களுக்கு எதிரான பொய் பிரசாரங்களை மேற்கொள்வதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. கல்விச் சமூகத்திற்கு எதிராக மக்களை தூண்டிவிடும் உண்மை நிலை புரியாத சிலர் ஆசிரியர் சமூகத்திற்கு எதிராக செயற்படுகின்றனர்.

இவ்விடயத்தில் அரசாங்கம் ஒரு பொய்யான நிதிப்பிரச்சினையை உருவாக்கி மக்களிடையே பிரசாரம் செய்து வருகிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதிபர் ஆசிரியர்களின் இந்த வேலைநிறுத்தப்போராட்டமானது தனியே சம்பள முரண்பாடுகளுக்கு மாத்திரமானதல்ல. இலவச கல்வியை உறுதிப்படுத்துதல், தரமான கல்வியை உறுதிப்படுத்துதல், வரவு செலவு திட்டத்தில் 6 வீதத்தை கல்விக்கு ஒதுக்குதல், கல்வி இராணுவ மற்றும் தனியார் மயமாக்கலுக்கும் எதிரான போராட்டமாகவும் உள்ளது என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image