தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதா? இல்லையா? அறிவித்தல் இன்று

தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதா? இல்லையா? அறிவித்தல் இன்று

நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து ஆராய்வதற்காக கொவிட்-19 பரவல் தடுப்பு செயலணி இன்று கூடவுள்ளது.



தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரையில் அமுலில் இருக்குமென முன்னர் அறிவிக்கப்பட்டது.

நாடுமுழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமாறு விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை இரண்டு வாரங்களுக்கு நீடிப்பதனால் சிறந்த பெறுபேற்றை பெற முடியும் என ராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளேவும் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image