நாடு முடக்குங்கள்- பங்காளிக்கட்சிகள் கோரிக்கை!

நாடு முடக்குங்கள்- பங்காளிக்கட்சிகள் கோரிக்கை!

மூன்று வாரங்களுக்காவது நாட்டை முடக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளன.

நாட்டில் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு நாடு முடக்கப்படாவிடின் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வைத்தியசாலை கட்டமைப்பினால் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்று விடும் என்று அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை மூடாவிட்டால், கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை வைத்தியசாலை கட்டமைப்பால் கட்டுப்படுத்த முடியாதளவுக்கு அதிகரிக்கும் என குறித்த 10 கட்சிகளும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


லங்கா சம சமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன. சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவங்ச. தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, எக்சத் மஹஜன பெரமுனவின் தலைவர் டிரான் அலஸ் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் அத்துரலிய ரத்தன தேரருடன், ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவர் வாசுதேவ நாணாயக்கார, , , பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, , இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டொக்டர் ஜீ. வீரசிங்க, ஶ்ரீலங்கா மக்கள் கட்சியின் அசங்க நவரத்ன மற்றும் யுத்துகம தேசிய அமைப்பின் கெவிந்து குமாரதுங்க ஆகியோர் அந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா பரவலை கட்டுப்பாடுத்துவதற்காக ஒருவார காலம் நாட்டை முடக்குமாறு அஸ்கிரி - மல்வத்து தேரர்கள் ஜனாதிபதிக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளமை குறிப்படத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image