ஆசிரியர் அதிபர் சேவை அகப்படுத்தப்பட்ட சேவையாகுமா?

ஆசிரியர் அதிபர் சேவை அகப்படுத்தப்பட்ட சேவையாகுமா?
ஆசிரியர் அதிபர் சேவையை அகப்படுத்தப்பட்ட சேவையாக (Closed Service) மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது தொடர்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் விளக்கமளித்துள்ளார்.

ஆசிரியர் அதிபர் சேவையை அகப்படுத்தப்பட்ட சேவையாக மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அண்மையில் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அகப்படுத்தப்பட்ட சேவை தொடர்பில் கொள்கை தீர்மானம் எடுப்பது ஒருபோதும் கடினமானது அல்ல. எதிர்க்கட்சித் தலைவருக்கு அது குறித்து தெரியுமா என்பது எனக்கு தெரியாது. 2008ஆம் ஆண்டு உயர்நீதிமன்றில் மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இது குறித்து மிகத் தெளிவான அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டது.

அகப்படுத்தப்பட்ட சேவையை ஸ்தாபிப்பது பொருத்தமானது என தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, நீதியரசர்களான ஸ்ரீபவன் மற்றும் ஷிராணி திலகாவர்தன ஆகியோரின் மிகத்தெளிவான வழக்குத் தீர்ப்பு இது தொடர்பில் உள்ளது. எமது அரசாங்கம் அந்த வழக்கு தீர்ப்பின் உள்ளடக்கங்கள், கொள்கை எண்ணக்கருவை ஏற்கிறது. எவ்வித பிரச்சினையும் இல்லை என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image