கொவிட் தொற்றாளர்களின் அதிகாிப்பால் ஒக்சிஜன் தேவை அதிகரிக்கும் நிலை

கொவிட் தொற்றாளர்களின் அதிகாிப்பால் ஒக்சிஜன் தேவை அதிகரிக்கும் நிலை

நாட்டில் டெல்டா பிரள்வு வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் ஒக்சிஜன் தேவையுள்ள நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் நாட்டில் நடமாட்டத் தடை தளர்த்த மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானமானது 'எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயல்' என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலை தொடர்ந்தால் நிலைமை அபாயகரமானதாக அமையும் என்றும் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், தீர்மானங்கள் எடுக்கப்படும்போது அதிகாரிகளுக்கு உண்மை நிலை குறித்து தௌிவுபடுத்தாது சுகாதார பிரிவு அதிகாரிகள் உண்மை நிலையை மறைத்தல் மற்றும் தாமதமாக அறிவித்தல் போன்ற நிலைகள் குறித்த மிகவும் கவலையடைவதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஒக்சிஜன் தேவையுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்குமானால் நாட்டில் உள்ள வசதிகள் போதாமல் போகும் நிலை ஏற்படும். இதனால் உயிரிழப்புகள் அதிகமாகும் அபாயம் உள்ளது என்று சங்கத்தின் தலைவர் லக்குமார் பெர்ணாண்டோவின் கையெழுத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி திட்டத்தின் எதிர்பார்க்கப்படும் புள்ளிவிவர இலக்குகளுக்கு ஏற்ப ஒரு நாளைக்கு நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நேரத்தில், நாட்டில் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டிருக்க வேண்டும். அனைத்தையும் ஆய்வு செய்து தற்போதைய நிலைமையை மறுபரிசீலனை செய்து, சுகாதாரம் மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு சிறப்பு மருத்துவர்களின் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image