பெண்கள், சிறுவர்களை இலக்கு வைக்கும் சைபர் செக்ஸ் குற்றங்கள்!

பெண்கள், சிறுவர்களை இலக்கு வைக்கும் சைபர் செக்ஸ் குற்றங்கள்!

​கடந்த ஆண்டு கொவிட் 19 தொற்று ஆரம்பித்ததிலிருந்து இலங்கையில் இணைய பாலியல் வன்முறைகள் 300 வீதத்தினால் அதிகரித்துள்ளது என்று மகளிர் உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

பெண்கள், சிறுவர்களை குறிவைத்து இவ்விணைய பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 மகளிர் அரசியல் அகாடமி, லங்காவின் தாய்மார்கள் மற்றும் மகள்கள், ஷாமா சக்தி, மற்றும் மகளிர் மேம்பாட்டு அறக்கட்டளை உள்ளிட்ட குழந்தைகள் மற்றும் மகளிர் அமைப்புகள் இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளதுடன் மகளிர் மற்றும் சிறுவர்களுக்கு நீதியை வழங்கக்கூடிய புதிய சட்டங்களை முறையாக ஒழுங்குப்படுத்தி தாமதமின்றி நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

கொரோனா தொற்று காலத்தில் இலங்கையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் 300 வீதத்தால் அதிகரித்துள்ளன. மகளிர் துன்புறுத்தலுக்குள்ளாகும் வழக்குகள் 33 வீதத்தால் அதிகரித்துள்ளன. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையினால் பிள்ளைகள் zoom தொழில்நுட்பதை பயன்படுத்தி கற்றலை மேற்கொள்கின்றனர். இதன் மூலமாகவும் பிள்ளைகள் இணைய பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாகின்றனர். வீட்டு வன்முறைகளும் அதிகரித்துள்ளன என்று மகளிர் அபிவிருத்தி நிதியத்தின் அமைப்பாளர் இ.எம். பண்டார மெனிக்கே தெரிவித்துள்ளார்.

சுதந்திர வர்த்தக வலயத்தில் குறிப்பாக ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்கள் எதிர்நோக்கும் வன்முறைகளையும் துன்புறுத்தல்களையும் இல்லாதொழிப்பதற்கு இலங்கையில் ஒழுங்குப்படுத்தப்பட்ட சட்ட நடவடிக்கைகள் மிக அவசியம் என்று இலங்கையின் தாய்மாரும் மகள்மாரும் அமைப்பின் இணைப்பாளர் பத்மினி வீரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார். ஆடைத் தொழிற்சாலைகளில் தமது அடைவை மேற்கொள்ள அத்தொழிற்சாலை உரிமையளார்கள் ஓய்வின்றி பெண்களிடம் வேலைவாங்குகின்றனர். சில தொழிற்சாலை உரிமையாளர்கள் தமது தொழிற்சாலையை தொற்று நீக்குவதும் இல்லை என்று பத்மினி வீரசூரிய குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image